sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

 திண்டிவனத்திற்கு முதல்வர் வருகை சிப்காட் வளாகத்தில் விழா ஏற்பாடு கலெக்டர் ஆய்வு 

/

 திண்டிவனத்திற்கு முதல்வர் வருகை சிப்காட் வளாகத்தில் விழா ஏற்பாடு கலெக்டர் ஆய்வு 

 திண்டிவனத்திற்கு முதல்வர் வருகை சிப்காட் வளாகத்தில் விழா ஏற்பாடு கலெக்டர் ஆய்வு 

 திண்டிவனத்திற்கு முதல்வர் வருகை சிப்காட் வளாகத்தில் விழா ஏற்பாடு கலெக்டர் ஆய்வு 


ADDED : ஜன 21, 2026 05:53 AM

Google News

ADDED : ஜன 21, 2026 05:53 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம்: திண்டிவனம் சிப்காட் வளாகத்தில், முதல்வர் வருகைக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து, கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார்.

விழுப்புரம் மாவட்டத்தில், அடுத்த மாதம் நடைபெற உள்ள அரசு நிகழ்ச்சிகளில், முதல்வர் ஸ்டாலின் பங்கேற்க உள்ளார். திண்டிவனம் சிப்காட் வளாகத்தில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்று, புதிய வளர்ச்சித் திட்டங்களை துவக்கி வைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளார்.

இதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து, திண்டிவனம் சிப்காட் வளாகத்திற்கு நேற்று, கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் நேரில் சென்று பார்வையிட்டார்.

திண்டிவனம் சப் கலெக்டர் ஆகாஷ், ஏ.டி.எஸ்.பி.,தினகரன், நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளர் உத்தண்டி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ராஜூ, திண்டிவனம் தாசில்தார் யுவராஜ் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

பின், முதல்வர் வரு கையை முன்னிட்டு சிப்காட் வளாகத்தில் மேற் கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணி குறித்து, அரசு அலுவலர்களுடன் கலெக்டர் ஆலோசனை நடத்தினார்.

நிகழ்ச்சி நடைபெறும் பகுதியில், சுகாதாரமான குடிநீர் வசதி, தொடர் மின் வசதி, ஜெனரேட்டர் வசதி, தற்காலிக கழிவறை வசதியினை ஏற்படுத்துவது குறித்து அறிவுரை வழங்கப்பட்டது. தொடர்ந்து, திண்டிவனத்தில் 5.56 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் மாவட்ட பதிவாளர் அலுவலக கட்டடம், 2.03 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதி தாக கட்டப்பட்டு வரும் சார் பதி வாளர் அலுவலக கட்டடம் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய் தார்.






      Dinamalar
      Follow us