/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழுப்புரத்திற்கு முதல்வர் வருகை நெடுஞ்சாலை புதுப்பிப்பு
/
விழுப்புரத்திற்கு முதல்வர் வருகை நெடுஞ்சாலை புதுப்பிப்பு
விழுப்புரத்திற்கு முதல்வர் வருகை நெடுஞ்சாலை புதுப்பிப்பு
விழுப்புரத்திற்கு முதல்வர் வருகை நெடுஞ்சாலை புதுப்பிப்பு
ADDED : ஜன 24, 2025 10:30 PM

விழுப்புரம்;விழுப்புரத்தில் முதல்வர் வந்து செல்லும் நெடுஞ்சாலை பகுதிகளில் சாலை புதுப்பிக்கும் பணிகள் நடந்து வருகிறது.
விழுப்புரத்திற்கு 27ம் தேதி மாலை வருகை தரும் முதல்வர் ஸ்டாலின், இரவு சுற்றுலா மாளிகையில் தங்குகிறார். 28ம் தேதி காலை 10 மணிக்கு, விழுப்புரம் அருகே ஜானகிபுரம் பைபாஸ் பகுதியில் அரசு சார்பில் புதிதாக கட்டியுள்ள தியாகிகள் மணி மண்டபத்தை திறந்து வைத்தும், அரசு நலத்திட்ட விழாவிலும் கலந்துகொள்கிறார்.
இதற்காக, விழுப்புரம் சுற்றுலா மாளிகையிலிருந்து கார் மூலம் திருச்சி சாலையில் சென்று, ஜானகிபுரம் பைபாஸ் மேம்பாலம் வழியாக நான்கு வழிச்சாலையில் வந்து, அருகே உள்ள மணிமண்ப விழாவில் முதல்வர் கலந்துகொள்கிறார். இதனால், முதல்வர் வருகை தரும் நெடுஞ்சாலை புதுப்பிக்கும் பணிகள் நடந்து வருகிறது.
நெடுஞ்சாலை துறை சார்பில், விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகே தொடங்கி திருச்சி சாலையில், இடதுபுறம் சாலை மூடப்பட்டு, இரண்டு நாட்களாக சாலையில் மேடு, பள்ளங்களை சரிசெய்து, புதிய தார்சாலை அமைக்கும் பணியில், ஒப்பந்த நிறுவனத்தினர் ஈடுபட்டுள்ளனர்.
விழுப்புரத்திலிருந்து ஜானகிபுரம் வரை இடதுபுற சாலையில் வேகத்தடைகள் அகற்றப்பட்டு, சாலை புதுப்பிக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதே போல், மணிமண்டபம் பகுதியிலும் புதிய தார்சாலை போடும் பணி நடந்துள்ளது.

