/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி கலெக்டர் தலைமையில் ஆலோசனை
/
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி கலெக்டர் தலைமையில் ஆலோசனை
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி கலெக்டர் தலைமையில் ஆலோசனை
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி கலெக்டர் தலைமையில் ஆலோசனை
ADDED : ஆக 22, 2025 10:04 PM

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பில் முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிக்கான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
இதில், கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கி கூறியதாவது:
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், மாவட்ட அளவில் முதல்வர் கோப்பைக்கான கூடைப்பந்து, கபாடி, கையுந்து பந்து, கைப்பந்து, கால்பந்து, தடகளம், சிலம்பம், பூப்பந்து உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள்,
பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர், அரசு ஊழியர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு வரும், 26ம் தேதி முதல் செப்., 10ம் தேதி வரை மாவட்ட விளையாட்டு அரங்கில் நடக்கிறது.
பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு கோ-கோ போட்டி வரும் 28 ம் தேதி முதல் 31ம் தேதி வரை ஜெயந்திர சரஸ்வதி மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் நடக்கிறது.
மாணவர்கள், மக்களுக்கான கிரிக்கெட் போட்டி வரும் 28 ம் தேதி முதல் செப்., 8 ம் தேதி வரை சிகா மெட்ரிக் மேல்நிலை பள்ளியிலும், மாணவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான நீச்சல் போட்டி வரும் செப்., 1ம் தேதி முதல் 5ம் தேதி வரை கலெக்டர் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள நீச்சல் குளத்திலும் நடைபெறுகிறது.
மாணவர்கள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான இறகு பந்து போட்டி வரும் செப்., 1ம் தேதி முதல் 8 ம் தேதி வரை பெருந்திட்ட வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆர்., உள் விளையாட்டு அரங்கிலும்,
மாணவர்களுக்கான மேஜை பந்து போட்டி வரும் செப்., 1ம் தேதி முதல் 4ம் தேதி வரை, விழுப்புரம் ரெட்டியார் மில்லில் உள்ள கணபதி டேபிள் டென்னிஸ் அகாடமியிலும் நடக்க உள்ளது.
கேரம் போட்டி வரும் 28 ம் தேதி முதல் செப்., 3ம் தேதி வரை ஜான்டூயி மெட்ரிக் மேல்நிலை பள்ளியிலும் செஸ் போட்டி வரும் செப்., 2ம் தேதி முதல் 6 ம் தேதி வரை வி.மருதுார் ஜான்டூயி மெட்ரிக் மேல்நிலை பள்ளியிலும், மாணவர்களுக்கான ஹாக்கி போட்டி வரும் செப்., 1ம் தேதி முதல் 6 ம் தேதி வரை மயிலம் பொறியியல் கல்லுாரியிலும் நடைபெறுகிறது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளத்தில் பதிவு செய்த வீரர், வீராங்கனைகள் குறிப்பிட்ட தேதிகளில் காலை 7:00 மணிக்கு குறிப்பிட்ட இடங்களில் ஆஜராக வேண்டும்.
பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவிகள் அவர்களுக்கான அடையாள சான்றிதழ், பொதுப்பிரிவினர் இருப்பிட சான்றிதழ், அரசு ஊழியர்கள் அடையாள அட்டை நகல், மாற்றுத்திறனாளி அட்டை நகல் மற்றும் அனைத்து பிரிவினர் ஆதார் நகல், வங்கி புத்தக நகல் கட்டாயம் கொண்டு வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில், மாவட்ட விளையாட்டு அலுவலர் ஆழிவாசன் உட்பட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.