/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள் துவக்கம்
/
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள் துவக்கம்
ADDED : ஆக 27, 2025 06:57 AM
விழுப்புரம் : மாவட்டத்தில் முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் துவக்க விழா நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கி, போட்டிகளை துவக்கி வைத்தார்.
சப் கலெக்டர் வெங்கடேஷ்வரன், லட்சுமணன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ., புஷ்பராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ஆழிவாசன் வரவேற்றார். போட்டிகளில் மாணவர்கள் ஆர்வத்தோடு பங்கேற்றனர்.
பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என 5 பிரிவுகளில், மாவட்ட அளவில் 25; மண்டல அளவில் 7; மாநில அளவில், 37; வகை விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு, மொத்த பரிசு தொகை ரூ.37 கோடி வழங்கப்படுகிறது.
இதில், மாவட்ட அளவில் தனிநபர் பிரிவில் முதலிடத்தை பிடிப்போருக்கு ரூ.3 ஆயிரம்; 2வது இடம் பிடிப்போருக்கு ரூ.2 ஆயிரம்; 3வது இடத்திற்கு ஆயிரம் ரூபாய்; என வழங்கப்படுகிறது.
குழு போட்டிகளில் முதலிடத்திற்கு ஒவ்வொருவருக்கு தலா ரூ.3 ஆயிரம்; 2வது இடத்திற்கு ரூ.2 ஆயிரம்; 3வது இடத்திற்கு ஆயிரம் ரூபாய் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது.
மாவட்ட அளவில் வெல்வோர், மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்பர். மாநில அளவில் தனிநபர் போட்டிகளில் முதலிடத்தை பெறுபவருக்கு தலா ரூ.1 லட்சம், 2வது இடத்திற்கு தலா ரூ.75 ஆயிரம், 3வது இடத்திற்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படுகிறது.
மாநில அளவிலான குழு விளையாட்டு போட்டிகளில் முதல் பரிசு பெறும் அணிக்கு ஒவ்வொருவருக்கும் தலா ரூ.75 ஆயிரமும், 2ம் இடத்தை பிடிக்கும் அணிக்கு ஒவ்வொருவருக்கும் தலா ரூ.50 ஆயிரம், 3வது இடம் பிடிக்கும் அணிக்கு ஒவ்வொருவருக்கும் தலா ரூ.25 ஆயிரம் பரிசு தொகையாக வழங்கப்படுகிறது.