/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் 121 மனுக்களுக்கு உடனடி தீர்வு
/
மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் 121 மனுக்களுக்கு உடனடி தீர்வு
மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் 121 மனுக்களுக்கு உடனடி தீர்வு
மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் 121 மனுக்களுக்கு உடனடி தீர்வு
ADDED : ஜன 10, 2024 12:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம், : விழுப்புரம் நகராட்சியில் நடந்த 'மக்களுடன் முதல்வர்' திட்ட முகாமில், 121 மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டது.
விழுப்புரம் நகராட்சியில் நடந்த 'மக்களுடன் முதல்வர்' திட்ட சிறப்பு முகாம்கள் கடந்த மாதம் 18ம் தேதி துவங்கி, ஜன.6ம் தேதி வரை நடைபெற்றது. நகரம் முழுதும்7 இடங்களில்நடந்த முகாம்களில் 517 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.
இதில்,121 மனுக்கள் மீதுகமிஷனர் ரமேஷ் உத்தரவின் பேரில், நடவடிக்கை எடுக்கப்பட்டுஉடனடி தீர்வுகாணப்பட்டது.
மீதமுள்ள மனுக்கள் குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு, 30 நாட்களில் பதில் அளிக்கப்படுமென கமிஷனர் தெரிவித்துள்ளார்.