/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
முதல்வர் சிறப்புரை தி.மு.க.,வினர் கண்டுகளிப்பு
/
முதல்வர் சிறப்புரை தி.மு.க.,வினர் கண்டுகளிப்பு
ADDED : செப் 05, 2025 09:51 PM

விழுப்புரம்:
விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க., சார்பில், ஆக்ஸ்போர்டு பல்கலையில் முதல்வர் சிறப்புரை நிகழ்வு நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.
வெளிநாடு சுற்று பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின், இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலையில் நடந்த சிறப்பு நிகழ்வில் கலந்துகொண்டார்.
அங்கு, ஈ.வே.ரா., உருவப்படத்தை திறந்து வைத்து, சுயமரியாதை இயக்கம் மற்றும் அதன் மரபுகள் மாநாட்டில் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
இந்த நிகழ்வு, விழுப்புரத்தில், மத்திய மாவட்ட தி.மு.க., சார்பில் நேற்று காலை நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. கலைஞர் அறிவாலயத்தில் எல்.இ.டி., திரையில் ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சியை, மத்திய மாவட்ட தி.மு.க., பொறுப்பாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., தலைமையில் கட்சியினர் பார்வையிட்டனர்.
இதில் ஒன்றிய சேர்மன்கள் வாசன், சச்சிதானந்தம், உஷா முரளி, விழுப்புரம் சேர்மன் தமிழ்ச்செல்வி, ஒன்றிய செயலர்கள் தெய்வசிகாமணி, பிரபாகரன், ராஜா, சந்திரசேகர், மைதிலி ராஜேந்திரன், முருகவேல், புஷ்பராஜ், சீனுசெல்வரங்கம், பாஸ்கர், கணேசன், நகர செயலர்கள் வெற்றிவேல், ஜீவா, இளைஞரணி தினகரன், பொறியாளரணி செல்வகுமார் உள்ளிட்டோர், கலந்து கொண்டனர்.