/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சிக்கு கோலம் பரிசு பெற்றவர்கள்
/
சிக்கு கோலம் பரிசு பெற்றவர்கள்
ADDED : ஜன 05, 2026 03:45 AM

முதல் பரிசு கோலப்போட்டி நடத்தி எங்களுக்கு வாய்ப்பளித்த தினமலர் நாளிதழுக்கு நன்றி. தொடர்ந்து கோலப்போட்டி நடத்த வேண்டும். முதல் முறையாக கலந்து கொண்டதில், முதல் பரிசு பெற்றது மகிழ்ச்சியாக உள்ளது.
-விஜயலட்சுமி, விழுப்புரம். இரண்டாம் பரிசு ஒவ்வொரு நாளும் ஒளி தரும், வாழ்க்கையின் ஒரு பக்கமாக தினமலர் நாளிதழை நினைக்கிறேன். கோலம் போடுவது எனக்கு மிகவும் பிடிக்கும். ஆர்வமுடன் கலந்து கொண்டேன். பரிசும் கிடைத்தது. தினமலருக்கு நன்றி.
-சுதா, சிந்தாமணி, விழுப்புரம் மூன்றாம் பரிசு முதல் முறையாக போட்டியில் பங்கேற்றேன். பரிசு கிடைக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை. மூன்றாம் பரிசு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி. அடுத்த ஆண்டும் பரிசு வாங்க நான் முயற்சி செய்வேன்.
-எழில், விழுப்புரம்.

