UPDATED : நவ 27, 2026 08:04 PM
ADDED : நவ 27, 2026 08:04 PM

கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரம் பழனிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் குழந்தை திருமணத்திற்கு எதிராக உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.
இதில், முதியோர் பி.டி.ஓ., வெற்றிவேல் தலைமை தாங்கினார். கூடுதல் பி.டி.ஓ., சையத் ஜாபர் முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் வாசுகி வரவேற்றார்.
இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவி லான்சி, வாசிக்க, மாணவ மாணவியர் அனைவரும் உறுதி மொழி ஏற்றனர். தொடர்ந்து பி.டி.ஓ., வெற்றிவேல் குழந்தை திருமணத்தின் பாதகங்கள் குறித்தும் இதனால் சமூகத்தில் ஏற்படும் பின் விளைவுகள் குறித்தும் மாணவ மாணவர்களிடையே பேசினார்.
தொடர்ந்து பள்ளி தாளாளர் ராஜேந்திரன், கூடுதல் பி.டி.ஓ., சையத் ஜாபர் ஆகியோர் பேசினர். இதில் மேலாளர்கள் மஞ்சுளா, செல்லம்மாள், ஐ.டி.ஐ முதல்வர் முகமது, உடற்கல்வி இயக்குனர் ராஜா, பயிற்றுனர் சத்தியமூர்த்தி, ஆசிரியர்கள் தாட்சாயணி, சங்கவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை ஊராட்சி செயலாளர் அனந்தராமன் மற்றும் பழனிவேலு கல்வி நிறுவன ஊழியர்கள் செய்தனர்.
