/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
குழந்தைகள் நலன் சிறப்பு சேவை துறை அலுவலர்கள் சங்க மத்திய செயற்குழு
/
குழந்தைகள் நலன் சிறப்பு சேவை துறை அலுவலர்கள் சங்க மத்திய செயற்குழு
குழந்தைகள் நலன் சிறப்பு சேவை துறை அலுவலர்கள் சங்க மத்திய செயற்குழு
குழந்தைகள் நலன் சிறப்பு சேவை துறை அலுவலர்கள் சங்க மத்திய செயற்குழு
ADDED : நவ 03, 2024 11:03 PM
விழுப்புரம்: விழுப்புரத்தில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை அலுவலர்கள் சங்க மத்திய செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் ராஜேஸ்வரி தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் முத்துக்குமார் முன்னிலை வகித்தார். அனைத்து மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். சங்க பொருளாளர் சிவக்குமார் தீர்மானங்களை வாசித்தார்.
கூட்டத்தில், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ் இயங்கும் அரசு பள்ளி ஆசிரியர்களை, கல்வித்துறைக்கு மாற்றப்போவதாக தகவல் பரவி வருவதால், மாணவர்கள் பாதிக்கப்படுவர். இதனால், ஒட்டுமொத்த ஆசிரியர்கள் இடமாற்றம் நடவடிக்கையை கைவிட வேண்டும்.
மாநில அளவில் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் வன்கொடுமையை தடுத்து நிறுத்தும் பணிகளை உறுதிப்படுத்தும் விதமாக, குழுந்தைகள் பாதுகாப்பு திட்ட ஒப்பந்த பணியாளர்களை நிரந்தரம் செய்து, சிறப்பு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
குழந்தை நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ் இயங்கும் இல்ல மாணவர்களுக்கு மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகள் ஒருங்கிணைந்து நடத்துவதை, இனி தனித்தனியாக நடத்தி பரிசளிக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.