/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
துாய இருதய கல்லுாரியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
/
துாய இருதய கல்லுாரியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
ADDED : டிச 21, 2025 06:16 AM

விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த பேரணியில் உள்ள துாய இருதய கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.
கல்லுாரி செயலாளர் பிரிட்டோ தலைமை தாங்கி, இயேசு கிறிஸ்து பிறந்ததன் முக்கியத்தவம் குறித்து பேசினார். முதல்வர் டேவிட் சவுந்தர், இயேசு கிறிஸ்து மக்களுக்கு செய்த அற்புதங்களை கூறினார். சேக்ரட் ஹார்ட் சி.பி.எஸ்.இ., மேல்நிலை பள்ளி தாளாளர் ஜெயஜோதி சிறப்புரையாற்றினார். பவுலின்மேரி, எத்தில் ரீடா, அருட்தந்தைகள் மார்டின் ஆண்டனி, மெசியா வாழ்த்தி பேசினர். துறை பேராசிரியர்கள், மாணவிகள் மற்றும் பல்வேறு கிளப்புகளைச் சேர்ந்த ஒருங்கிணைப்பாளர்கள் பங்கேற்றனர். மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடந்தது.

