/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஜோசப் பேராலயத்தில் கிறிஸ்துமஸ் விழா
/
ஜோசப் பேராலயத்தில் கிறிஸ்துமஸ் விழா
ADDED : ஜன 01, 2025 05:29 AM

விழுப்புரம்: திருநாவலுார் ஜோசப் பேராலயத்தில் கிறிஸ்துவ ஐக்கிய இயக்கம், ஜோசப் கலை அறிவியல் கல்லுாரி மற்றும் கமலா கல்வியில் கல்லூரி சார்பில் கிறிஸ்துமஸ் விழா நடந்தது.
இக்கூட்டத்தில் காருண்யா பல்கலை., வேந்தர் பால்தினகரன், ஆசிர்வாத தொலைக்காட்சி நிறுவனர் ஆலன்பால், இந்திய சுவிசேஷ திருச்சபை பேராயர் கதிரொளி மாணிக்கம், அப்போஸ்தலர் எடிசன் தலைவர், ஓய்வு பெற்ற காஷ்மீர் ஐக்கோர்ட் நீதிபதி பால்வசந்தகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.
சிறப்பு விருந்தினர்களாக தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபை பேராயர் கிறிஸ்துவ சாம்ராஜ், பீட்டர் பால்தாமஸ் பேராயர் ஆற்காடு லுத்தரன் திருச்சபை, சுபசோமு செயலாளர் தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபை, டேனியல் ஜெயராஜ் பேராயர் டிஇஎல்சி திருச்சபை, டேனியல் ஜெயராஜ் பேராயர் தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபை, விஜயகுமார் பேராயர் ஆற்காடு லுத்தரன் திருச்சபை, பேராயர்கள் நித்யராஜ், அதிசயராஜ், ஆண்ட்ரூஸ் ரூபன் தலைவர் தொடக்கக் கல்வி கழகம், ஞானப்பிரகாசம், மறைதிரு தாமஸ் கென்னடி, ஜான்சன் ஆகியோர் பங்கேற்றனர்.
விழாவில் பேராயர் நித்யராஜ், அதிசயராஜ் அவர்களின் ஜெபம் மற்றும் பிராத்தனை பாடல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
விழாவில் பங்கேற்ற அனைத்து ஆயர் பெருமக்களுக்கும் நலத்திட்ட உதவிகள் மற்றும் உணவுகள் வழங்கப்பட்டன. கல்லூரி தாளாளர் கமலா ஜோசப், டாக்டர் கவாஸ்கர், விருதுநகர் அசோக், கல்லூரி முதல்வர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.

