
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரம் பழனிவேலு மெட்ரிக் பள்ளி வளாகத்தில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு, விழுப்புரம் இவன்ஜெலிக்ல் லுாத்ரன் சர்ச் போதகர் ஐசாக் தலைமை தாங்கினார். கிருபாலயா சாரிடபிள் டிரஸ்ட் நிர்வாகி ஜோசப்பின் முன்னிலை வகித்தார். பழனிவேல மெட்ரிக் பள்ளி நிர்வாகி ராஜேந்திரன் வரவேற்றார்.
ஜினோ கர்டிஸ் ஜோசப், ஜெயராஜகுமார், பேரறிவாளன் முன்னிலையில் பள்ளிக் குழந்தைகள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
மெட்ரிக் பள்ளி முதல்வர் வாசுகி, ஐ.டி.ஐ., மேலாளர் செல்லம்மாள், பள்ளி பட்டதாரி ஆசிரியைகள் சுவாதி, மஞ்சுளா, தாட்சாயினி மற்றும் ஐ.டி.ஐ., பயிற்சி அலுவலர்கள் நுார்முகமது, சத்தியமூர்த்தி, ஆனந்தராஜ் மற்றும் பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.
கலைநிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.
பள்ளியின் தாளாளர் தேன்மொழி நன்றி கூறினார்.

