/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
இரு குடும்பத்தினர் மோதல்: 3 பேர் கைது
/
இரு குடும்பத்தினர் மோதல்: 3 பேர் கைது
ADDED : ஜன 30, 2024 06:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : விழுப்புரம் அடுத்த குமளம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் மனைவி தமிழ் இலக்கியா, 28; இவரது 2 வயது மகனும், பக்கத்து வீட்டைச் சேர்ந்த ராவணன், 35; என்பவரின் 3 வயது மகனும், வீட்டின் முன் விளையாடினர். அப்போது அவர்களுக்குள் சண்டை ஏற்பட்டுள்ளது.
இதனையறிந்த மணிகண்டன் குடும்பத்தினர், ராவணன் குடும்பத்தினரிடம் கேட்டுள்ளனர். இதில், இரு தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டு தாக்கிக் கொண்டனர்.
இது குறித்து, இரு தரப்பு புகாரின் பேரில், ராவணன், 35; ராஜாங்கம், 50; தமிழ்மாறன் உட்பட 9 பேர் மீது வழக்குப் பதிந்து, ராவணன், முருகானந்தம், 33; ரவிக்குமார், 35; ஆகிய 3 பேரை கைது செய்தனர்.