ADDED : செப் 27, 2025 02:18 AM

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி டோல் பிளாசாவில் துாய்மை பணி பசுமை விழாவை நகாய் திட்ட இயக்குனர் துவக்கி வைத்தார்.
சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் சார்பில் கடந்த, 17 ம் தேதி முதல் வரும் அக்.1 ம் தேதி வரை பொது இடங்களில் துாய்மை பணி, பசுமை விழா நடக்கிறது.
இதையொட்டி, நேற்று முன்தினம் விக்கிரவாண்டி டோல்பிளாசாவில் உளுந்துார்பேட்டை எக்ஸ்பிரஸ் வேஸ் பி.லிட் சார்பில் நடந்த விழாவிற்கு விழுப்புரம் நகாய் திட்ட இயக்குனர் வரதராசன் தலைமை தாங்கி , துாய்மை பணியையும், பசுமை விழாவையும் துவக்கி வைத்தார்.
இதில், டோல்பிளாசாவில் பணிபுரியும் 100 பணியாளர்களுடன் பொது இடங்களில் உள்ள குப்பைகளை சுத்தம் செய்து பிளீச்சிங் பவுடர்களை தெளித்து துாய்மை பணியில் ஈடுபட்டார். மேலாளர் சதீஷ்குமார், பி.ஆர்.ஓ., தண்டபாணி, ஒருங்கிணைப்பாளர் சொர்ணமணி, மேலாளர்கள் அசோக்குமார், மனோஜ் குமார் உள்ளிட்ட டோல் பிளாசா ஊழியர்கள் பங்கேற்றனர்.