/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி
/
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி
ADDED : செப் 25, 2024 03:39 AM

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் நடந்து வரும் முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில், பொதுப் பிரிவினர்களுக்கான இறுதி போட்டி துவங்கியது.
விழுப்புரம் மாவட்டத்தில், விளையாட்டுத்துறை சார்பில், இந்தாண்டுக்கான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள், கடந்த 11ம் தேதி துவங்கியது.
பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள் மற்றும் மாற்றுத் திறனாளர்கள் ஆகிய 5 பிரிவுகளில், 27 விளையாட்டுகள், 53 வகையில் தனித்தனியாக நடக்கிறது.
பொது பிரிவினர்களுக்கான இறுதிப் போட்டிகள் நேற்று முன்தினம் காலை துவங்கியது. மாநில கைப்பந்துக் கழக தலைவர் கவுதம சிகாமணி போட்டிகளை தொடங்கி வைத்தார்.
மாவட்ட விளையாட்டு அலுவலர் ஜெயக்குமாரி வரவேற்றார். மாவட்ட தடகள சங்க தலைவர் புஷ்பராஜ், கூடைப்பந்தாட்ட கழக தலைவர் ஜனகராஜ், விளையாட்டுக்குழு ஒருங்கிணைப்பாளர் வாலிபால் மணி, தி.மு.க., நகர செயலாளர் சக்கரை, மாவட்ட உடற்கல்வி ஆசிரியர் செந்தில்குமார் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். ஜோதிப்பிரியா உள்ளிட்ட உடற்கல்வி இயக்குனர்கள் குழுவினர், போட்டிகளை ஒருங்கிணைத்தனர்.