ADDED : செப் 23, 2026 07:32 PM
அ நிறம் | அளவு
செஞ்சி: கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விவசாய சங்க தலைவர் ஒருவர் கூட்டுறவு சங்க செயலாளர்களை அவதூறாக பேசியதாக தெரிகிறது. அவரை கண்டித்தும், கைது செய்ய வலியுறுத்தியும் விழுப்புரம் மாவட்டத்தில் கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தினர், 2 நாட்களாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, நேற்று செஞ்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் முன்பு இச்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு டாக்பியா மாவட்ட இணை செயலாளர் ஞானசேகரன் தலைமை தாங்கினார்.
மாவட்ட இணை செயலாளர் சக்திதாசன், நிர்வாகிகள் சரவணன், பாஸ்கர், கோவிந்தராஜ், சம்பத்து, லோகநாதன், கண்ணன், செல்வநிதி உள்ளிட்ட கூட்டுறவு சங்க செயலாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
