/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வீட்டில் புகுந்த நாகபாம்பு மீட்பு
/
வீட்டில் புகுந்த நாகபாம்பு மீட்பு
ADDED : அக் 28, 2025 11:48 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வானுார்: வீட்டில் புகுந்த நாக பாம்பை தீயணைப்பு வீரர்கள் மீட்டு வனப்பகுதியில் விட்டனர்.
வானுார் அடுத்த இரும்பை மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மதன். இவரது வீட்டில் 4 அடி நீளமுள்ள நாக பாம்பு புகுந்தது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த வீட்டிலிருந்தவர்கள் அலறியடித்தபடி வெளியே ஓடி வந்தனர்.
தகவலறிந்த வானுார் தீயணைப்பு நிலைய வீரர்கள், சம்பவ இடத்திற்குச் சென்று வீட்டிற்குள் புகுந்த நாக பாம்பை மீட்டு, வனப்பகுதியில் விட்டனர்.

