/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கூவாகம் கோவில் திருவிழா முன்னேற்பாடு; பாதுகாப்பு குறித்து கலெக்டர் ஆலோசனை
/
கூவாகம் கோவில் திருவிழா முன்னேற்பாடு; பாதுகாப்பு குறித்து கலெக்டர் ஆலோசனை
கூவாகம் கோவில் திருவிழா முன்னேற்பாடு; பாதுகாப்பு குறித்து கலெக்டர் ஆலோசனை
கூவாகம் கோவில் திருவிழா முன்னேற்பாடு; பாதுகாப்பு குறித்து கலெக்டர் ஆலோசனை
ADDED : மே 03, 2025 10:30 PM
விழுப்புரம் : கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா முன்னேற்பாடு, பாதுகாப்பு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் விழுப்புரத்தில் நடந்தது.
கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, கலெக்டர் ஷேக்அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கி பேசியதாவது:
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை தாலுகா, கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா வரும் 11ம் தேதி துவங்குகிறது.
முக்கிய நிகழ்வாக 13ம் தேதி இரவு சுவாமி திருக்கண் திறத்தல் மற்றும் அன்றைய தினம் திருநங்கைகள் தாலி கட்டுதல் நிகழ்ச்சியும் நடைபெறும்.
விழாவிற்கு பல்வேறு நாடுகள், மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான திருநங்கைகள் பங்கேற்பர். விழாவையொட்டி விழுப்புரம் மாவட்டத்தில் வரும் 11ம் தேதி புதிய பஸ் நிலைய நகராட்சி திடலில் திருநங்கைகளுக்கான மிஸ் திருநங்கை அழகி போட்டி நடக்கிறது.
மேலும், 12ம் தேதி விழுப்புரம் ஆஞ்சநேயர் திருமண மண்டபத்தில் காலையில் முதல் சுற்று மிஸ் குவாகம் அழகி போட்டியும், மாலையில், விழுப்புரம் நகராட்சி திடலில் இறுதிச்சுற்று போட்டியும் நடக்கிறது.
இதுதொடர்பாக பாதுகாப்புமற்றும் முன்னேற்பாடு பணிகளை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும்.
காவல் துறை சார்பில், பாதுகாப்பு, போக்குவரத்து சீர் செய்யும் பணிகளும், நகராட்சி சார்பில் குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்திட வேண்டும். சுகாதாரத்துறை சார்பில் மருத்துவ முகாம் நடத்தப்பட வேண்டும். மாவட்டத்தில் திருநங்கைகள் தங்கும் விடுதிகள், ஓட்டல்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு கலெக்டர் பேசினார்.
கூட்டத்தில் சப் கலெக்டர் முகுந்தன், கலால் உதவி ஆணையர் ராஜி, மாவட்ட வழங்கல் அலுவலர் சந்திரசேகர், சுகாதார அலுவலர் செந்தில்குமார் உள்ளிட்ட முக்கிய துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.