/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தாலுகா அலுவலகத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு
/
தாலுகா அலுவலகத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு
ADDED : ஏப் 02, 2025 03:32 AM
விழுப்புரம் : விழுப்புரம் தாலுகா அலுவலகத்தில் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.
விழுப்புரம் தாலுகா அலுவலகத்திற்கு, நேற்று காலை திடீரென சென்ற கலெக்டர் ஷேக்அப்துல் ரஹ்மான், அனைத்து பிரிவுகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அலுவலர்கள், பணியாளர்கள் வருகை பதிவேடு, அலுவலக ஆணை, ஒருங்கிணைந்த காலமுறை பதிவேடு, மறு கவனிப்பு பதிவேடு, அஞ்சல் பதிவேடு.
முதல்வர் தனிப்பிரிவு மனு, மக்கள் குறைதீர் மனு, விவசாயிகள் குறைதீர் மனுக்கள் குறித்த பதிவேடுகள், பிறப்பு, இறப்பு பதிவேடு, வீட்டுமனை பட்டா பதிவேடு. ஆக்கிரமிப்பு அகற்றுதல், முதியோர் மற்றும் இதர உதவித்தொகை மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விசாரித்தார்.
அலுவலர்கள், மக்களுக்கான திட்டங்களை உரிய காலத்தில் வழங்கும் வகையில் செயல்படவேண்டும். மனுக்களுக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என அறிவுறுத்தினார்.
அதைத் தொடர்ந்து, தாலுகா அலுவலக இ-சேவை மையத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்து நாள்தோறும் வருகை தரும் நபர்கள் மற்றும் சேவைகள் குறித்த பதிவேடுகள் பார்வையிட்டார்.
சேவை மையத்தின் வெளிப்புறத்தில், காத்திருப்போர் அமரும் வகையில் நிழற்கொட்டகை மற்றும் இருக்கை வசதிகள் அமைத்திட உத்தரவிட்டார். விழுப்புரம் ஆர்.டி.ஓ., முருகேசன், தாசில்தார் கனிமொழி உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.

