/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் அரசியல் கட்சியினருடன் கலெக்டர் ஆலோசனை
/
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் அரசியல் கட்சியினருடன் கலெக்டர் ஆலோசனை
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் அரசியல் கட்சியினருடன் கலெக்டர் ஆலோசனை
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் அரசியல் கட்சியினருடன் கலெக்டர் ஆலோசனை
ADDED : அக் 30, 2025 06:55 AM

விழுப்புரம்: விழுப்புரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு, மாவட்ட தேர்தல் நடத்து ம் அலுவலரான, கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கினார்.
இதில், அவர் பேசிய தாவது:
சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்தாண்டு ஜனவரியில் வெளியான இறுதி வாக்காளர்பட்டியலுடன் கடந்த, 2002ம் ஆண்டில் வெளியான சிறப்பு தீவிர திருத்த வாக்காளர் பட்டியல் அடிப்படையில் சரிபார்ப்பு மற்றும் பொருத்துதல், இணைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
கடந்த, 2002ம் ஆண்டில் வெளியிடப்பட்ட தீவிர திருத்த வாக்காளர் பட்டியல் தேர்தல் ஆணையம் மற்றும் விழுப்புரம் கலெக்டரின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் 2025 ம் ஆண்டு வெளியிடப்பட்ட பட்டியலில் 17,27,490 வாக்களர்கள் உள்ளனர். கடந்த, 2002 ம் ஆண்டு சிறப்பு தீவிர திருத்த வாக்காளர் பட்டியலின்படி, 14,56,995 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.
கடந்த, 2002 ம் ஆண்டு மற்றும் 2025 ம் ஆண்டு வாக்காளர் பட்டியலுடன் சரிபார்ப்பு மற்றும் ஒத்திசைவு செய்து வாக்காளர்கள் விவரம் சரிபார்க்கப்படவுள்ளது.
தற்போது மாவட்டத்தில் 1970 ஓட்டுச்சாவடி மையங்கள் உள்ளன. ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக சென்று கணக்கெடுக்கும் பணி வரும் நவ., 4 முதல் டிச., 4ம் தேதி வரை; வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு டிச., 9ம் தேதி; கோரிக்கைகள் மற்றும் எதிர்ப்பு காலம் டிச., 9 முதல் 2026 ஜன., 8ம் தேதி வரை; அறிவிப்பு கட்டம் (விசாரணை மற்றும் சரிபார்ப்பு) வரும் டிச., 9 முதல் ஜன., 31ம் தேதி வரை; நடக்கவுள்ளது.
இறுதி வாக்காளர் பட்டியல் வரும் பிப்., 7ம் தேதி வெளியிடப்படும். சிறப்பு தீவிர திருத்தம் பணியின்போது, ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள், வீடு வீடாக சென்று தற்போது வாக்காளர் பட்டியலில் உள்ள அனைத்து வாக்காளர்களுக்கும், முன்னதாக அச்சிடப்பட்ட வாக்காளர் கணக்கெடுப்பு படிவத்தினை ஒப்புகை சீட்டுடன் வழங்குவார்.
வாக்காளர்கள் அந்த படிவத்தினை பெற்று, முழுமையாக பூர்த்தி செய்து போட்டோ ஒட்டி, கையொப்பமிட்டு ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களிடம் ஒப்படைக்க வேண்டும். ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் வாக்காளர்களுக்கு பொருத்துதல், இணைப்பு பணிகளுக்கு கணக்கெடுப்பு படிவத்தை பூர்த்தி செய்ய உதவ வேண்டும்.
ஒவ்வொரு வாக்காளரின் வீட்டிற்கும் குறைந்தது மூன்று முறை சென்று பார்க்க வேண்டும். புதிய வாக்காளர்களை சேர்க்க ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் படிவம் 6 மற்றும் அறிக்கை படிவத்துடன் சுய உறுதிமொழி படிவத்தினை சேகரிக்க வேண்டும்.
நகர்ப்புற வாக்காளர்கள், தற்காலிகமாக இடம் பெயர்ந்தவர்கள், கணக்கெடுப்பு படிவத்தை ஆன்லைனில் நிரப்பவும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இறந்தவர்கள், நிரந்தரமாக இடம் மாறியவர்கள் அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பதிவு செய்யப்பட்டவர்கள் ஆகியோரை அடையாளம் காணப்படும்.
கணக்கெடுப்பு படிவம் தவிர வேறு எந்த ஆவணத்தையும் வாக்காளரிடமிருந்து சேகரிக்க தேவையில்லை. கணக்கெடுப்பு படிவங்கள் பெறப்பட்ட அனைத்து வாக்காளர்களின் பெயர்களையும் வரைவு பட்டியலில் சேர்க்கப்படும்.
முந்தைய எஸ்.ஐ.ஆர்., உடன் பெயர்கள் பொருந்தவில்லை அல்லது இணைக்கப்படவில்லை என்றால் அந்த வாக்காளர்களுக்கு வாக்காளர் பதிவு அலுவலரால் அறிவிப்பு அனுப்பப்படும்.
மேல்முறையீட்டு செயல்முறை குறித்து விசாரிக்கப்படும். ஒவ்வொரு 10 ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுக்கு ஒரு மேற்பார்வை அலுவலர் நியமனம் செய்து மேற்பார்வை செய்வர்.
இதற்காக கலெக்டர் அலுவலகத்திலும், அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் பிரத்யேக கட்டுப்பாட்டு மையம் மற்றும் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.
கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு அறைக்கு 1950 என்ற எண்ணிலும், சட்டசபை தொகுதியான செஞ்சி 04145 -222007, மயிலம் 04147 -239449, திண்டிவனம் (தனி) 04147 -222090, வானுார் (தனி) 0413 -2677391, விழுப்புரம் 04146 -222554, விக்கிரவாண்டி 04146-233132, திருக்கோவிலுார் 04153 -252316 ஆகிய எண்களில் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான சந்தேகம் மற்றும் புகார்களுக்கு தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.
இவ்வாறு அவர் கலெக்டர் பேசினார்.
அப்போது, டி.ஆர்.ஓ., அரிதாஸ், திருக்கோவிலுார் சப் கலெக்டர் ஆனந்த் குமார் சிங் மற்று ம் எம்.எல்.ஏ.,க்கள் மஸ்தான், சக்கரபாணி, மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் ராமதாஸ், காங்., மாவட்ட தலைவர் ரமேஷ், நகர தலைவர் செல்வராஜ் தே.மு.தி.க., நகர செயலாளர் மணிகண்டன், பா.ஜ., சுகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

