/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மயிலம் பகுதியில் கலெக்டர் ஆய்வு
/
மயிலம் பகுதியில் கலெக்டர் ஆய்வு
ADDED : டிச 20, 2024 05:03 AM

மயிலம்: மயிலம் அடுத்த கிராமத்தில் பழங்குடி மக்களுக்கு கட்டப்பட்டு வரும் தொகுப்பு வீடுகளை கலெக்டர் பழனி நேற்று ஆய்வு செய்தார்.
தொடர்ந்து சங்கராபரணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் உயர் மட்ட பாலம் பணிகளை பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
நெடி மோழியனுாரில் ஊராட்சி அலுவலகத்தில் நடக்கும் பணிகளை ஆய்வு செய்தார். நீலதொட்டி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டியையும், அருகில் உள்ள அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்தும் ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது, விழுப்புரம் கூடுதல் கலெக்டர் ஸ்ருதன்ஜெய் நாராயணன், மயிலம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிலம்புசெல்வன், ராமதாஸ் உடனிருந்தனர்.