/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வளர்ச்சி திட்டப்பணிகள் கலெக்டர் ஆய்வு
/
வளர்ச்சி திட்டப்பணிகள் கலெக்டர் ஆய்வு
ADDED : ஜன 07, 2026 05:48 AM

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் நடந்து வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ேஷக் அப்துல் ரஹ்மான் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின், அவர் கூறியதாவது;
மாவட்டத்தில் பல்வேறு துறைகள் சார்பில் வளர்ச்சி திட்டப் பணிகள் நடந்து வருகிறது. விக்கிரவாண்டி அடுத்த வி.நெற்குணம் மற்றும் வழுதாவூர் கிராமங்களுக்கு இடையே சங்கராபரணி ஆற்றின் குறுக்கே 30 கோடியில் தடுப்பணை அமைக்க நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.
வீடூர் அணையிலிருந்து 20 கி.மீ., துாரத்தில் வி.நெற்குணம் மற்றும் வழுதாவூர் கிராமங்களுக்கு இடையில் சங்கராபரணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இந்த தடுப்பணை கட்டப்படுவதால் வழுதாவூர், கலிங்கமலை, வி.நெற்குணம், பக்கிரிப்பாளையம், கலித்திராம்பட்டு, முட்ராம்பட்டு கிராமங்களில் உள்ள 380 எக்டர் பரப்பளவு விவசாய நிலங்கள் பயன்பெறும்.
நிலத்தடி நீர்மட்டம் உயர்வதால் தடுப்பணை அருகே உள்ள 218 கிணறுகள் நீர் செறிவூட்டப்படும். மாவட்டத்தில் உள்ள புல உட்பிரிவு எண்களுக்கு பயிர் காப்பீடு குறித்த கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டு மொபைல் செயலி மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் பல்வேறு துறைகள் மூலம் நடந்து வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது' என்றார்.
தொடர்ந்து, வானுார் அரசு மருத்துவமனை வளாகத்தில் 2.10 கோடியில் கட்டப்பட்டுவரும் கூடுதல் மருத்துவமனை கட்டடப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின், மயிலம் ஒன்றியம், சின்னநெற்குணம் ஊராட்சியில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை சார்பில் நடந்து வரும் மின்னணு பயிர் கணக்கெடுப்பு பணி ஆய்வு செய்யப்பட்டது.
அப்போது, நீர்வளத்துறை செயற்பொறியாளர் அருணகிரி, உதவி செயற்பொறியாளர் அய்யப்பன், கலெக்டர் நேர்முக உதவியாளர் (விவசாயம்) பிரேமலதா, பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் முத்துகுமார், வானுார் தாசில்தார் வித்யாதரன், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் பொன்னி உட்பட பலர் பங்கேற்றனர்.

