ADDED : மே 31, 2025 01:08 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அடுத்த சிந்தாமணி அரசு மேல்நிலைப் பள்ளியில், கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறப்பு முன்னேற்பாடுகள் குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார்.
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து வரும் 2ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளது.
நேற்று விழுப்புரம் மாவட்ட கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் சிந்தாமணி அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 மாணவர்கள் சேர்க்கை, கண்காணிப்பு கேமரா பொருத்தல், வகுப்பறைகள் , கழிவறைகள், குடிநீர் வசதிகள் முறையாக உள்ளதா என ஆய்வு செய்தார்.
டி.இ.ஓ., சேகர், தாசில்தார் செல்வமூர்த்தி, பி.டி.ஓ., க்கள் சையது முகமது, நாராயணன், பள்ளி தலைமை ஆசிரியை சுசிலா, பள்ளி ஆசிரியர்கள் உள்பட பலர் உடன் இருந்தனர்.