/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மேல்மலையனுார் பகுதியில் கலெக்டர் ஆய்வு
/
மேல்மலையனுார் பகுதியில் கலெக்டர் ஆய்வு
ADDED : மார் 20, 2025 05:00 AM

அவலுார்பேட்டை: மேல்மலையனுார் பகுதியில் உங்களை தேடி, உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் ஆய்வு மேற்கொண்டார்.
மேல்மலையனுார் தாலுகாவில், உங்களை தேடி, உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் ஆய்வு செய்தார். வளத்தி மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெறுபவர்களின் பதிவேடுகளையும், மருந்து இருப்பு விவரங்களையும், பொதுமக்களிடம் சிகிச்சைகள் குறித்தும், துாய்மை பணியாளர்களிடம் அடிப்படை தேவைகளையும் கேட்டறிந்தார். பின், வளத்தி ரேஷன் கடையை ஆய்வு செய்தார்.
இதை தொடர்ந்து, தேவனுார் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கட்டப்பட்டு வரும் உண்டு உறைவிட பள்ளியை ஆய்வு செய்தார். கெங்கபுரத்தில் ஜன்மன் திட்டத்தின் கீழ் இருளர் இன மக்களுக்கு பட்டாவிற்கான ஆணை வழங்கினார். மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் நடத்தும் இயற்கை உள்ளீடு மைய செயல்பாடுகளை கேட்டறிந்தார். மேல்காரணை கிராமத்தில் வடவெட்டி - கீழ்செவலாம்பாடி சாலை சேதமானதால், புதிய சாலை அமைக்க ஆய்வு செய்தார்.
திண்டிவனம் சப் கலெக்டர் திவ்யான் சு நிகாம், துணை கலெக்டர் பிரேமி, தாசில்தார் தனலட்சுமி, ஒன்றிய சேர்மன் கண்மணி நெடுஞ்செழியன், பி.டி.ஓ., ஜெய்சங்கர் உடனிருந்தனர்.