/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
இருளர் குடியிருப்பிற்கு பட்டா வழங்க கலெக்டர் ஆய்வு
/
இருளர் குடியிருப்பிற்கு பட்டா வழங்க கலெக்டர் ஆய்வு
இருளர் குடியிருப்பிற்கு பட்டா வழங்க கலெக்டர் ஆய்வு
இருளர் குடியிருப்பிற்கு பட்டா வழங்க கலெக்டர் ஆய்வு
ADDED : நவ 28, 2024 07:32 AM

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டியில் இருளர் குடியிருப்பிற்கு ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் மனைப்பட்டா வழங்க கலெக்டர் ஆய்வு.
நேற்று காலை மாவட்ட கலெக்டர் பழனி விக்கிரவாண்டி அடுத்த ஆவுடையார் பட்டு அருகில் வருவாய் துறை சார்பில் இருளர்கள் குடியிருப்பிற்காக இடம் ஒதுக்கீடு செய்துள்ள இடத்தில் மனை பட்டா வழங்க இடத்தினை பார்வையிட்டார் .அப்போது கலெக்டரிடம் தங்களுக்கு சாலை வசதி, மயான பாதை வசதி செய்து தர இருளர்கள் கோரிக்கைவைத்தனர் அவர்களது கோரிக்கையை ஏற்ற கலெக்டர் நிறைவேற்றி தருவதாக உறுதி கூறினார்.
பேரூராட்சி சேர்மன் அப்துல் சலாம், தாசில்தார் யுவராஜ், செயல் அலுவலர் ேஷக் லத்தீப்,தேர்தல் தனி தாசில்தார் பாரதிதாசன், வருவாய் ஆய்வாளர் தெய்வீகன்,வி.ஏ.ஓ.,க்கள் ராஜா, ஜெயகாந்தன், பேரூராட்சி கவுன்சிலர் வெண்ணிலா முத்து உட்பட பலர் உடனிருந்தனர்.