/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அரசு குழந்தைகள் இல்லத்தில் சேர்ந்து படிக்க கலெக்டர் அழைப்பு
/
அரசு குழந்தைகள் இல்லத்தில் சேர்ந்து படிக்க கலெக்டர் அழைப்பு
அரசு குழந்தைகள் இல்லத்தில் சேர்ந்து படிக்க கலெக்டர் அழைப்பு
அரசு குழந்தைகள் இல்லத்தில் சேர்ந்து படிக்க கலெக்டர் அழைப்பு
ADDED : மே 14, 2025 01:09 AM
விழுப்புரம், : விழுப்புரம் அரசு குழந்தைகள் இல்லத்தில் சேர்க்கை நடைபெறுவதாக கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் செய்திக்குறிப்பு;
விழுப்புரம், சாலாமேட்டில் அரசு குழந்தைகள் இல்லத்தில், 84 ஆண் குழந்தைகள், வரவேற்பு பிரிவில் 7 ஆண் குழந்தைகள், 7 பெண் குழுந்தைகள் என மொத்தம் 98 குழந்தைகள் தங்கி கல்வி பயில இடவசதி உள்ளது.
இந்த இல்லத்தில் பெற்றோரை இழந்த மற்றும் ஒற்றை பெற்றோரை இழந்த குழந்தைகள், பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தேவைப்படும் ஆண் குழந்தைகள் தங்கி கல்வி பயில்கின்றனர்.
இல்லத்தில் 6 முதல் 18 வயது வரையில் தங்கி 1ம் வகுப்பு முதல் 10ம் பத்தாம் வகுப்பு வரை தங்கி பயிலவும், அவர்களுக்கு தேவையான கல்வி, உணவு, இருப்பிடம், தொழில் சார்ந்த பயிற்சிகள் அனைத்தும் கட்டணமின்றி வழங்கப்படுகிறது.
இல்லத்தில் தங்கி கல்வி பயில விரும்புவோர், விழுப்புரம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, கலெக்டர் அலுவலக வளாகம், பழைய உணவக கட்டடம் முகவரியில் நேரிலோ அல்லது விழுப்புரம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் தொலைபேசி 04146 290659 எண்ணைத் தொடர்பு கொண்டோ பயன் பெறலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.