/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஊட்டச்சத்து வேளாண் இயக்க திட்டம் சிறுவாடியில் கலெக்டர் துவக்கி வைப்பு

ADDED : ஜூலை 05, 2025 04:43 AM

மரக்காணம் : ஊட்டச்சத்து வேளாண் இயக்க திட்டத்தினை முதல்வர் ஸ்டாலின் காணொலி மூலம் நேற்று தொடங்கி வைத்தார். இந்நிலையில் இத்திட்டத்தை மரக்காணம் அடுத்த சிறுவாடி தனியார் மண்டபத்தில் கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் துவக்கி வைத்தார்.
ஊட்டச்சத்து மிக்க பயறு வகை விதைகள், காய்கறி விதைகள் மற்றும் பழ மரக்கன்றுகள் 100 சதவீத மானியத்தில் வழங்குவதன் மூலம் ஊட்டச்சத்து மிக்க உணவுப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்வது இத்திட்டத்தின் நோக்கம்.
மேலும் 25 ஊட்டச்சத்து மிக்க பயிர்களின் விதை தொகுப்பு, 25 காய்கறி விதைகள் மற்றும் 10 பழ மரக்கன்றுகளை விவசாயிகளுக்கு கலெக்டர் வழங்கினார்.
இதில் உதவி கலெக்டர் வெங்கடேஷ்வரன், மரக்காணம் சேர்மன் தயாளன், தோட்டக்கலை துணை இயக்குநர் அன்பழகன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் பிரேமலதா, மரக்காணம் வட்டார வேளாண் உதவி இயக்குனர் ஆரோக்கியராஜ், தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் காரல் மார்க்ஸ், திண்டிவனம் வேளாண் அறிவியல் நிலைய ஒருங்கிணைப்பாளர் திருவரசன், கால்நடை உதவி மருத்துவர் கோமதி உள்பட பலர் கலந்து கொண்டனர். சிறுவாடி, முருக்கேரி, நகர், அனுமந்தை கிராமத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு, பயன் பெற்றனர்.