/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வீடூர் அணையில் கலெக்டர் திடீர் ஆய்வு
/
வீடூர் அணையில் கலெக்டர் திடீர் ஆய்வு
ADDED : ஏப் 11, 2025 06:15 AM

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே வீடூர் அணையை கலெக்டர் ஆய்வு செய்து மீன் வளர்ப்பு பண்ணையை பார்வையிட்டார்.
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் ேஷக் அப்துல் ரஹ்மான் நேற்று வீடூர் அணையை பார்வையிட்டு, அணையின் மொத்த கொள்ளவான (32 அடி) 605 மில்லியன் கன அடியில் தற்பொழுது (26அடி) 279.998 மில்லியன் கன அடி நீர் மட்ட இருப்புகள் உள்ளதையும், அணை பராமரிப்பு குறித்தும், பாசன வசதிகள் குறித்தும் கேட்டறிந்து பின்னர் மீன் வளர்ப்பு பண்ணையை பார்வையிட்டார்.
2024-25 ஆண்டிற்கான மீன் விதைப்பண்ணை தயார் நிலையை பார்வையிட்டு கடந்த ஆண்டில் 17 லட்சம் மீன் விரலிகளின் இலக்கை 100 சதவிகிதம் அடைந்துள்ளதை கேட்டறிந்து, மீன் வளர்ப்பு மற்றும் ஏல நடைமுறைகள் குறித்து கேட்டறிந்தார்.
நீர் வளத்துறைஉதவி செயற்பொறியாளர் ரமேஷ், உதவி பொறியாளர்பாபு, மீன் வளத்துறை உதவி இயக்குனர் நித்திய பிரியதர்ஷினி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.

