/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
இன்ஜி., படிப்பை தவறவிட்ட ஏழை மாணவி அரசு செலவில் படிக்க வாய்ப்பளித்த கலெக்டர்
/
இன்ஜி., படிப்பை தவறவிட்ட ஏழை மாணவி அரசு செலவில் படிக்க வாய்ப்பளித்த கலெக்டர்
இன்ஜி., படிப்பை தவறவிட்ட ஏழை மாணவி அரசு செலவில் படிக்க வாய்ப்பளித்த கலெக்டர்
இன்ஜி., படிப்பை தவறவிட்ட ஏழை மாணவி அரசு செலவில் படிக்க வாய்ப்பளித்த கலெக்டர்
ADDED : செப் 09, 2025 06:10 AM

விழுப்புரம் : விழுப்புரம் அருகே ஏழ்மையால் இன்ஜினியரிங் சேர்க்கையை தவறவிட்ட ஏழை அரசு பள்ளி மாணவிக்கு, அரசு செலவில் படிக்க கலெக்டர் நடவடிக்கை எடுத்தார்.
விழுப்புரம் அருகே அத்தியூர் திருக்கையை சேர்ந்த அய்யனார் மகள் வினிதா. அங்குள்ள அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்து, 521 மதிப்பெண் எடுத்து பள்ளியில் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றார்.
பொறியியல் படிக்க விரும்பி, விண்ணப்பித்து கவுன்சிலிங்கில் கலந்துகொண்டார். அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத அரசு இடஒதுக்கீட்டில், விழுப்புரம் அருகே தனியார் கல்லுாரியில் இடம் கிடைத்தது.
பெற்றோர் சென்னையில் தங்கி கூலி வேலை செய்வதால், விழுப்புரத்தில் தங்கி செலவு செய்து படிப்பை தொடர முடியாது என்பதால், அந்த வாய்ப்பை விட்டு, விடுதியுடன் கூடிய கல்லுாரியில் சேர, 2ம் கட்ட கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பித்தார்.
அப்போது, 7.5 சதவீத இடஒதுக்கீட்டு பிரிவுக்கு பதில், தனியார் இ-சேவை மையத்தில், தவறுதலாக பொதுப்பிரிவில் விண்ணப்பித்தனர். இதனால், சேலத்தில் உள்ள தனியார் கல்லுாரியில் இடம் கிடைத்து, கடன் வாங்கி அந்த கல்லூரியில் சேர்ந்தார்.
தொடர்ந்து கடன் வாங்கி படிக்க வைக்க முடியாது என கூறி பெற்றோர் படிப்பை நிறுத்தினர். இதனால், வேதனையடைந்த மாணவி வினிதா, அரசு ஒதுக்கீட்டில் விடுதியுடன் கூடிய கல்லுாரியில் பயில இடம் பெற்று தர கடந்த வாரம் விழுப்புரம் கலெக்டரிடம் மனு அளித்தார். இச்செய்தி தினமலர் நாளிதழில் வெளியானது.
இது குறித்து, கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான், தீவிர முயற்சி எடுத்து, அண்ணா பல்கலை., நிர்வாகத்தில் பேசி, மாணவி வினிதாவிற்கு, அரசு செலவில் 4 ஆண்டுகள் பொறியியல் படிப்பதற்கும், வளவனுார் அருகே தனியார் பொறியியல் கல்லுாரியில் சேர்க்கை கிடைக்க நடவடிக்கை எடுத்தார்.
பொறியியல் கல்லூரியில் இ.சி.இ., பிரிவில் சேர்ந்த மாணவி வினிதா, நேற்று தனது பெற்றோருடன் வந்து கலெக்டரை சந்தித்து நன்றி தெரிவித்தார்.