/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஆய்வின் போது விடுதி வார்டன் 'ஆப்சென்ட்' 'சஸ்பெண்ட்' செய்ய கலெக்டர் உத்தரவு
/
ஆய்வின் போது விடுதி வார்டன் 'ஆப்சென்ட்' 'சஸ்பெண்ட்' செய்ய கலெக்டர் உத்தரவு
ஆய்வின் போது விடுதி வார்டன் 'ஆப்சென்ட்' 'சஸ்பெண்ட்' செய்ய கலெக்டர் உத்தரவு
ஆய்வின் போது விடுதி வார்டன் 'ஆப்சென்ட்' 'சஸ்பெண்ட்' செய்ய கலெக்டர் உத்தரவு
ADDED : பிப் 22, 2024 11:47 PM

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி பேரூராட்சியில் கலெக்டர் ஆய்வின்போது மாணவியர் விடுதியில் வார்டன் இல்லாததால் சஸ்பெண்ட் செய்ய துறை அதிகாரிக்கு உத்தரவிட்டார்.
விக்கிரவாண்டியில் நேற்று அதிகாலை கலெக்டர் பழனி, பேரூராட்சி அலுவலகத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்ட செயல்பாடுகள் மற்றும் துப்புரவு பணிகளை பார்வையிட்டு பேரூராட்சி பணியாளர்களை பாராட்டினார்.
பஸ் நிலையம், அங்குள்ள கழிவறை மற்றும் 87.75 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதுக்குளத்தை பார்வையிட்டார்.
பின், தீயணைப்பு நிலையத்தை ஆய்வு செய்து தீ தடுப்பு சாதன பதிவேடுகளை ஆய்வு செய்தார், பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் பால் குளிரூட்டும் மையத்தை பார்வையிட்டும், பாலின் தரம் மற்றும் உற்பத்தியாளர்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.
அப்போது, பேரூராட்சிஅலுவலக குளக்கரை பகுதியில் குடியிருக்கும் பூம்பூம் மாடு வைத்திருக்கும் 10 குடும்பங்கள் ஆதார் அட்டை, ஜாதிச்சான்று, மனைப்பட்டா கேட்டு மனு கொடுத்தனர். மனுவைப் பெற்ற கலெக்டர், மனு மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்
அதனைத் தொடர்ந்து, ஆதி திராவிட நல மாணவியர் விடுதியை ஆய்வு செய்தார். அப்போது, விடுதியில் வருகை பதிவேட்டில் 45 மாணவிகள் என குறிப்பிட்டிருந்த நிலையில், ஒரு மாணவி கூட விடுதியில் இல்லை. விடுதி வார்டனும் பணியில் இல்லாதது தெரியவந்தது.
சமையலர் மட்டுமே இருந்த நிலையில் அவர், கலெக்டரின் கேள்விக்கு மழுப்பலான பதில் கூறியதால் டென்ஷன் ஆன கலெக்டர், விடுதி வார்டன் கீதாவை 'சஸ்பெண்ட்' செய்ய உத்தரவிட்டார்.
ஆய்வின் போது கூடுதல் கலெக்டர் ஸ்ருதன்ஜெய் நாராயணன், தாசில்தார் யுவராஜ், பி.டி.ஓ.,சுமதி, பேரூராட்சி சேர்மன் அப்துல் சலாம், துணைச் சேர்மன் பாலாஜி, நியமன குழு உறுப்பினர் சர்க்கார் பாபு, செயல் அலுவலர் ேஷக் லத்தீப், மண்டல துணை தாசில்தார் ஆறுமுகம் உட்பட பலர் உடனிருந்தனர்.