/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விபத்துக்களை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அதிகாரிகளுக்கு கலெக்டர் அதிரடி உத்தரவு
/
விபத்துக்களை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அதிகாரிகளுக்கு கலெக்டர் அதிரடி உத்தரவு
விபத்துக்களை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அதிகாரிகளுக்கு கலெக்டர் அதிரடி உத்தரவு
விபத்துக்களை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அதிகாரிகளுக்கு கலெக்டர் அதிரடி உத்தரவு
ADDED : ஜூன் 01, 2025 11:41 PM

விழுப்புரம்:
விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில், சாலை பாதுகாப்பு குழு கூட்டம் நடந்தது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் நடக்கும் சாலை விபத்துக்களை தடுக்கவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள கலெக்டர் தலைமையில், சாலை பாதுகாப்பு குழுக்கள் செயல்பட்டு வருகிறது. அக்குழுவின் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் ஷேக் அப்துல் ரகுமான் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில், விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை நடந்த சாலை விபத்துகளில் இறந்தவர்கள், பாதித்தோரின் எண்ணிக்கை, சாலை விபத்துக்கான காரணங்கள், விபத்து நடந்த இடத்தில், விபத்தை தடுக்க எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடந்தது.
கூட்டத்தில் கலெக்டர் ஷேக் அப்துல் ரகுமான் பேசியதாவது;
சாலைகளில் நடக்கும் மேம்பாலம், சாலை அமைக்கும் பணிகள் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் விரைவாக முடிக்க வேண்டும். சாலை பணி நடப்பது தொடர்பாக 100 மீட்டர் முன்னதாக அறிவிப்பு பலகை அமைக்க வேண்டும். பணியிடம் அருகே பேரல், பேரிகார்டுகளில் ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்டி தடுப்புகள் அமைக்க வேண்டும்.
பஸ்கள் தேசிய நெடுஞ்சாலை நடுவில் நிறுத்தி பயணிகளை இறக்கி ஏற்றுவதால் போக்குவரத்து பாதிப்பு, விபத்து ஏற்படுகிறது. சர்வீஸ் சாலைகளில் நிறுத்தி பயணிகள் இறக்க அரசு பஸ் டிரைவர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும். போக்குவரத்திற்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க வேண்டும்.
விபத்து ஏற்பட்டால், வட்டார போக்குவரத்து அலுவலர், போலீசார், நெடுஞ்சாலை பொறியாளர் சம்பவ இடத்தை பார்வையிட்டு, விபத்திற்கான காரணம், அதை தடுப்பதிற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும். அனைத்து வேகத்தடை மீதும் தெர்மோபிளாஸ்ட் பெயிண்டால் கோடுகள் வரைய வேண்டும். முக்கிய சந்திப்புகளில் ஹைமாஸ் விளக்கு, திசை காட்டும் பலகை அமைக்க வேண்டும். ஆட்டோக்கள், ஷேர் ஆட்டோக்களை சாலையின் நடுவில் நிறுத்த கூடாது. அனுமதிக்கப்பட்ட நபர்களுக்கு மேல் பயணிகளை ஏற்ற கூடாது என கூறினார்.
கூட்டத்தில் எஸ்.பி., சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் அரிதாஸ் உட்பட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.