UPDATED : செப் 17, 2026 09:52 PM
ADDED : செப் 17, 2026 08:13 PM
விழுப்புரம்: விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில், திருவெண்ணெய்நல்லுார் மற்றும் மேல்மலையனுார் வட்டாரங்களில் 2026-27 ஆம் ஆண்டிற்கான வளமிகு வட்டார வளர்ச்சித் திட்டங்கள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு, கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கினார்.
இதில், திருவெண்ணெய்நல்லுார் வட்டாரத்தில், 16 திட்டப்பணிகள் மற்றும் மேல்மலையனுார் வட்டாரங்களில், 18 திட்டப்பணிகள் என மொத்தம், 34 வளமிகு வட்டார வளர்ச்சித் திட்டங்கள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படுவது குறித்தும், விரைவில் பணிகளை துவக்கி தரமான முறையில் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர கலெக்டர் அறிவுறுத்தினார்.
அப்போது, மாவட்ட திட்டக்குழு அலுவலர் (பொறுப்பு) சுரேஷ்குமார், மாவட்ட சுகாதார அலுவலர் செந்தில்குமார் மற்றும் பி.டி.ஓ.,க்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
