/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மர்ம விலங்கு நடமாட்டம் கலெக்டர் ஆலோசனை
/
மர்ம விலங்கு நடமாட்டம் கலெக்டர் ஆலோசனை
ADDED : ஆக 28, 2025 02:21 AM
விழுப்புரம்: மாவட்டத்தில் மர்ம விலங்கு, கால்நடைகளை தாக்குவது தொடர்பாக ஆலோசனைக்கூட்டம் நடைபெற்ற து.
விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், வனத்துறை மற்றும் கால்நடைத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்திற்கு, கலெக்டர்  ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கினார். அவர் பேசியதாவது:
திண்டிவனம், செஞ்சி பகுதிகளில்  வனத்துறை மற்றும் கால்நடைத்துறை அலுவலர்கள் மேற்பார்வையில், கால்நடை பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கால்நடைகளை தாக்கியது,  என்ன வகையாக  விலங்கு  என்பதை கண்டறிய அதன் கால் தடம் மற்றும் உமிழ்நீர் மாதிரிகள் தடயவியல் அறிவியல் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.  அதன் முடிவுகள் கிடைத்ததும், துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆலோசித்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.  வன பகுதி அருகில் வசிக்கும் விவசாயிகளுக்கு மர்ம விலங்கு தாக்குதல் குறித்தும், பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்திட அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இவ்வாறு அவர் பேசினார்.

