/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
புதிய வழித்தடங்களில் மினி பஸ்கள் இயக்குவது குறித்து கலெக்டர் ஆலோசனை
/
புதிய வழித்தடங்களில் மினி பஸ்கள் இயக்குவது குறித்து கலெக்டர் ஆலோசனை
புதிய வழித்தடங்களில் மினி பஸ்கள் இயக்குவது குறித்து கலெக்டர் ஆலோசனை
புதிய வழித்தடங்களில் மினி பஸ்கள் இயக்குவது குறித்து கலெக்டர் ஆலோசனை
ADDED : ஏப் 15, 2025 08:49 PM
விழுப்புரம்; விழுப்புரம் மாவட்டத்தில், புதிய வழித்தடங்களுக்கு மினி பஸ் இயக்க ஆணை பெற்ற உரிமையாளர்களுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது.
விழுப்புரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்த கூட்டத்தில், கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில், மாவட்டத்தில், தற்போது புதிய வழித்தடங்களுக்கு மினி பஸ் இயக்குவதற்காக விண்ணப்பம் கோரப்பட்டு, அதில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு, ஏற்கனவே செயல்முறை ஆணைகள் வழங்கப்பட்டது.
இதில், விழுப்புரம் வட்டார போக்குவரத்து அலுவலக கட்டுபாட்டிற்குட்பட்ட 41 வழித்தடங்களுக்கு செயல்முறை ஆணை பெற்றவர்களில், 20 வழித்தடங்களுக்கு மினி பஸ் சேவைக்கான பஸ்கள் இயக்க தயார் நிலையில் உள்ளது.
அதேபோல், திண்டிவனம் வட்டார போக்குவரத்து அலுவலக கட்டுபாட்டிற்குட்பட்ட 63 வழித்தடங்களுக்கு, பஸ் இயக்க செயல்முறை ஆணை பெற்றவர்களில், 26 வழித்தடங்களுக்கு மினி பஸ் சேவைக்கான பஸ்கள் தயார் நிலையில் உள்ளது.
தொடர்ந்து, மீதமுள்ள வழித்தடங்களுக்கு செயல்முறை ஆணை பெற்றவர்களிடம், மினி பஸ் தயார்படுத்தாமல் உள்ளதால், அதற்கான காரணம் கேட்டறிந்ததுடன், ஒருவார காலத்திற்குள் மீதமுள்ள வழித்தடங்களுக்கு மினி பஸ்கள் இயககும் வகையில், பஸ் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில், திண்டிவனம் வட்டார போக்குவரத்து அலுவலர் முக்கண்ணன், விழுப்புரம் வட்டார போக்குவரத்து அலுவலர் அருணாச்சலம் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.