/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கோவில் திருவிழா முன்னேற்பாடு கலெக்டர் ஆலோசனை
/
கோவில் திருவிழா முன்னேற்பாடு கலெக்டர் ஆலோசனை
ADDED : மார் 27, 2025 04:05 AM

விழுப்புரம்: மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடக்கவுள்ள அமாவாசை திருவிழா, திருவக்கரை சந்திரமவுலீஸ்வரர் கோவில் பவுர்ணணி விழாவை யொட்டி, முன்னேற்பாட்டு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
கலெக்டர் ஷேக் அப்துல் ரகுமான் தலைமை தாங்கி, கூறியதாவது,
கோவில் திருவிழாவை யொட்டி, பக்தர்கள், பொதுமக்கள் சாமி தரிசனம் செய்வதற்காக ஊராட்சி ஒன்றியம் சார்பில் அடிப்படை வசதிகள் செய்திடவும், தேவையான பணியாளர்களை பணியமர்த்த வேண்டும்.காவல் துறை சார்பில் பாதுகாப்பு நடவடிக்கை செய்திட வேண்டும். பஸ் நிலையம், கிராம தெருக்கள், கோவில் வளாகம் உட்பட இதர இடங்களில் திருட்டு, வழிப்பறி, அசம்பாவிதம் நடக்காமல் இருக்க போதியளவு போலீசாரை பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தவேண்டும்.
ஊஞ்சல் உற்சவம் நடக்கும் நேரத்தில் கோவிலின் ஊஞ்சல் மண்டபம், கிழக்கு மண்டபம் மேற்பகுதியில் யாரும் ஏறாத வகையில் கண்காணிப்பு பணிகளை செய்ய வேண்டும். கனரக வாகனங்கள் விழா நாட்களில் செல்லாதபடி கண்காணிக்க வேண்டும்.கோவில் வளாகங்களில் தற்காலிக கடைகள் ஏற்படுத்துவதை தடுக்க வேண்டும்.
மின்வாரியம், மின் வழித்தடங்களை பார்வையிட்டு சரிசெய்திட வேண்டும். மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் கண்காணிப்பு கேமரா அமைத்து கண்காணித்திட வேண்டும். தடுப்பு கட்டை வசதிகள் ஏற்படுத்திட வேண்டம். தீயணைப்பு, சுகாதார துறை அலுவலர்கள், அவர்களுக்கான பணிகளில் தயார் நிலையில் இருக்க வேண்டும் என தெரிவித்தார். இதில், எஸ்.பி., சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் அரிதாஸ், சப்-கலெக்டர் திவ்யான்ஷூ நிகம் உட்பட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.