/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விக்கிரவாண்டியில் கலெக்டர் ஆய்வு
/
விக்கிரவாண்டியில் கலெக்டர் ஆய்வு
ADDED : மே 07, 2025 01:41 AM

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டியில் அரசு வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார்.
விக்கிரவாண்டி வந்த கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான், கால்நடைத்துறை சார்பில் நாட்டுக் கோழி குஞ்சுகள் வளர்ப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு, ரெட்டிக்குப்பம் பகுதியில் வளர்க்கப்படும் நாட்டுக் கோழிகள் வளர்ப்பு குறித்தும், அதே பகுதியில் உள்ள பொது சுகாதார கழிப்பறை பராமரிப்பு குறித்து ஆய்வு செய்தார். விக்கிரவாண்டி டி.எஸ்.பி., அலுவலகம் அருகே மகளிர் சுய உதவிக்குழு கட்டடம் கட்டுவதற்கான இடத்தை தேர்வு செய்து பார்வையிட்டார்.
கால்நடை துறை மண்டல இணை இயக்குனர் மோகன், மகளிர் திட்ட அலுவலர் சுதா, தாசில்தார் செல்வமூர்த்தி, டி.எஸ்.பி., நந்தகுமார், சப்இன்ஸ்பெக்டர் மணிகண்டன், பேரூராட்சி இளநிலை உதவியாளர் ராஜேஷ், வருவாய் ஆய்வாளர் தமிழரசன், வி.ஏ.ஓ.,க்கள் ராஜா, ஜெயகாந்தன், துப்புரவு மேற்பார்வையாளர் ராமலிங்கம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
ஏரியில் ஆய்வு
கோலியனுார் அய்யங்கோவில்பட்டு ஊராட்சி முத்தாம்பாளையம் ஏரியை நேற்று கலெக்டர் ஷேக் அப்துல் ரகுமான் ஆய்வு செய்தார். அப்போது 2,300 மீட்டர் நீளத்திற்கு ஏரி மற்றும் வரத்து வாய்க்கால் துார்வாரவும், 1,500 மீட்டர் சுற்றளவு ஏரி கரைப்பகுதியை பலப்படுத்தி, நடைபாதை அமைப்பது தொடர்பாக ஆலோசன வழங்கினார். மகளிர் திட்ட இயக்குநர் சுதா, கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குநர் (பொறுப்பு) மோகன், வேளாண்மை துறை இணை இயக்குநர் ஈஷ்வர், நீர்வளத்துறை உதவி பொறியாளர் கார்த்தி உட்பட அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

