/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கலெக்டர் அலுவலகம் முற்றுகை : 850 மாற்றுத்திறனாளிகள் கைது
/
கலெக்டர் அலுவலகம் முற்றுகை : 850 மாற்றுத்திறனாளிகள் கைது
கலெக்டர் அலுவலகம் முற்றுகை : 850 மாற்றுத்திறனாளிகள் கைது
கலெக்டர் அலுவலகம் முற்றுகை : 850 மாற்றுத்திறனாளிகள் கைது
ADDED : நவ 12, 2025 06:24 AM

விழுப்புரம்: தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகை இட்டு போராட்டத்தில் ஈடுபட்ட 850 பேரை போலீசார் கைது செய்தனர்.
போராட்டத்திற்கு, மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் யுகந்தி, துணைத் தலைவர் முருகன், மாவட்ட குழு உறுப்பினர் முத்துவேல், துணைத் தலைவர்கள் அய்யனார், மும்மூர்த்தி, துணைச் செயலாளர்கள் மணிகண்டன், கவுரி, குமார், செல்வி ஆகியோர் கோரிக்கைகள் வலியுறுத்தி பேசினர்.
போராட்டத்தில், மாற்றுத் திறனாளிகளின் மாதாந்திர உதவித் தொகையை ஆந்திரா மாநில அரசு வழங்குவது போல, மாதம் 6,000, 10 ஆயிரம், 15 ஆயிரம் ரூபாய் என உயர்த்தி தமிழக அரசு வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட 850 பேரை ஏ.டி.எஸ்.பி., தினகரன் தலைமையிலான போலீசார், கைது செய் தனர்.

