/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கல்லுாரி மாணவரிடம் ரூ.2.50 லட்சம் மோசடி
/
கல்லுாரி மாணவரிடம் ரூ.2.50 லட்சம் மோசடி
ADDED : மார் 19, 2025 04:45 AM
விழுப்புரம்: விக்கிரவாண்டி அருகே கல்லுாரி மாணவரை ஆன்லைனில் ஏமாற்றி 2.50 லட்சம் ரூபாய் மோசடி செய்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
விக்கிரவாண்டி அடுத்த ஆர்.சி., மேலக்கொந்தை கிராமத்தைச் சேர்ந்தவர் ராமதாஸ் மகன் சித்தார்த், 21; சென்னையில் தனியார் கல்லுாரியில் பி.ஏ., ஆங்கிலம் 3ம் ஆண்டு படித்து வருகிறார்.
கடந்த 28ம் தேதி இவர் வீட்டிலிருந்த போது, மொபைல் போனில் தொடர்பு கொண்ட மர்ம நபர், தான் சென்னையில் இருந்து பேசுவதாக கூறி ஒரு வீடியோவை அனுப்புகிறோம் என கூறியுள்ளார். உடன், சித்தார்த், மர்ம நபர் பேசிய மொபைல் எண்ணை பிளாக் செய்துள்ளார்.
பின், சித்தார்த் மொபைல் போனுக்கு பல முறை ஓ.டி.பி., எண் வந்து கொண்டிருந்தது. இதையடுத்து, சித்தார்த் வங்கி கணக்கிலிருந்து அவருக்கு தெரியாமலே 2.50 லட்சம் ரூபாய் மர்ம நபரால் நுாதனமாக திருடப்பட்டுள்ளது.
இதையறிந்த சித்தார்த் விழுப்புரம் சைபர் கிரைம் போலீசாரிடம் நேற்று புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.