கிணற்றில் குளித்த கல்லுாரி மாணவர் நீரில் மூழ்கி பலி
கிணற்றில் குளித்த கல்லுாரி மாணவர் நீரில் மூழ்கி பலி
ADDED : மார் 09, 2026 04:47 AM

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே கிணற்றில் குளித்தவர் நீரில் மூழ்கி இறந்தார்.
சேலம், அம்மாபாளையத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார் மகன் சிவசித்தார்த், 20; திருச்சி கிருஷ்ணா மருத்துவக் கல்லுாரியில் பி.என்.ஒய்.எஸ்., இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
விக்கிரவாண்டி அடுத்த ஆவுடையார்பட்டைச் சேர்ந்தவர் தமிழ்வாணன். கல்லுாரி நண்பர்கள். இருவரும் நேற்று விக்கிரவாண்டியில் உடன் படிக்கும் கல்லுாரி நண்பர் ரகுராமன் என்பவரின் திருமண வரவேற்புக்காக விக்கிரவாண்டிக்கு வந்திருந்தனர்.
நேற்று காலை 8:00 மணிக்கு, ஆவுடையார்பட்டில் உள்ள விவசாய கிணற்றில் தமிழ்வாணனும் சிவசித்தார்த்தும் குளித்தனர். சிவசித்தார்த்துக்கு நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கினார்.
தகவல் அறிந்த விக்கிரவாண்டி போலீசார் மற்றும் தீயணைப்புத் துறயைினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நீண்ட நேரம் போராடி மாலை 4:00 மணியளவில் சிவசித்தார்த் உடலை மீட்டனர்.
இதுகுறித்த புகாரின் பேரில், விக்கிரவாண்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
