/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பஸ் படிக்கட்டிலிருந்து விழுந்த கல்லுாரி மாணவர் காயம்
/
பஸ் படிக்கட்டிலிருந்து விழுந்த கல்லுாரி மாணவர் காயம்
பஸ் படிக்கட்டிலிருந்து விழுந்த கல்லுாரி மாணவர் காயம்
பஸ் படிக்கட்டிலிருந்து விழுந்த கல்லுாரி மாணவர் காயம்
ADDED : ஆக 24, 2025 10:04 PM
விழுப்புரம் : விழுப்புரத்தில் அரசு டவுன் பஸ் படிக்கட்டிலிருந்து தவறி விழுந்த கல்லுாரி மாணவர் காயம் அடைந்தார்.
வானுார் அடுத்த காட்ராம்பாக்கத்தை சேர்ந்தவர் சவரிமுத்து மகன் விஷ்ணுகுமார், 18; இவர், விழுப்புரம் அரசு கலை கல்லுாரியில், பி.எஸ்.சி., இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். வழக்கம் போல் நேற்று முன்தினம் காலை கல்லுாரிக்கு பஸ்சில் வந்தார்.
விழுப்புரம் பழைய பஸ் நிலையத்திலிருந்து கிழக்கு பாண்டி ரோடு நோக்கி புறப்பட்ட பில்லுார் செல்லும் (தடம் எண்:1 கே) டவுன் பஸ்சில் ஏறி சென்றார். இவர், சக மாணவர்கள் சிலருடன் பின் பக்க படிக்கட்டில் தொங்கியபடி பயணித்தார்.
காலை 8:45 மணிக்கு பழைய பஸ் நிலையத்திலிருந்து சென்றபோது, படிக்கட்டில் தொங்கி சென்றவர் நிலை தடுமாறு கீழே விழுந்தார். அப்போது, அவரது வலது காலின் கட்டை விரலில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அவரை மீட்டு விழுப்புரம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சையளித்து, மேல் சிகிச்சைக்கு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இந்த விபத்து குறித்த புகாரின் பேரில் விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.