/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
டிப்பர் லாரி மோதி கல்லுாரி மாணவர் பலி
/
டிப்பர் லாரி மோதி கல்லுாரி மாணவர் பலி
ADDED : அக் 26, 2024 07:37 AM
மரக்காணம்: மரக்காணம் அருகே கல்குவாரியில் வேலை செய்த கல்லுாரி மாணவர், டிப்பர் லாரி மோதி இறந்தார்.
மரக்காணம் அடுத்த பெருமுக்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் மகன் பரமசிவம், 19; இவர் திண்டிவனம் கோவிந்தசாமி அரசு கல்லுாரியில் பி.ஏ., மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.
இவர், இரவு நேரம் மற்றும் விடுமுறை நாட்களில் உப்புவேலுார் சாலையில் உள்ள ஸ்ரீவாரி கல்குவாரியில் வேலை செய்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு 11:00 மணியளவில் குவாரியில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது, டிப்பர் லாரியை வெள்ளகுளத்தை சேர்ந்த டிரைவர் தணிகாசலம், 37; பின் நோக்கி எடுத்தபோது, பரமசிவம் மீது மோதியது.
இதில் படுகாயமடைந்த பரமசிவம் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவர் இறந்தார்.
பிரம்மதேசம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.