நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம், :கல்லுாரி மாணவி மாயமானது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
விழுப்புரம் அடுத்த கொளத்துாரை சேர்ந்தவர் பாலு மகள் சந்தியா, 19; விழுப்புரம் தனியார் பொறியியல் கல்லுாரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
நேற்று முன்தினம் கல்லுாரிக்கு சென்ற சந்தியா, மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், அவரது பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர்.
விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.