ADDED : நவ 20, 2025 05:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே கல்லுாரிக்கு சென்ற தங்கையை காணவில்லை என சகோதரர் போலீசில் புகார் செய்துள்ளார்.
பெரிய தச்சூர் அடுத்த பூதேரியை சேர்ந்த முருகன் மகள் யாஷிகா, 17; இவர் பேரணியில் உள்ள தனியார் கல்லுாரியில் பி.காம்., முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
கடந்த 17ம் தேதி கல்லுாரிக்கு செல்வதாக கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை.
இது குறித்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.

