ADDED : ஏப் 19, 2026 04:54 PM
அ நிறம் | அளவு
விழுப்புரம்: கல்லுாரி மாணவி மாயமானது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
விழுப்புரம் அடுத்த பண்ணக்குப்பத்தை சேர்ந்தவர் விஜயன் மகள் மோகனபிரியா, 19; விழுப்புரம் எம்.ஜி.ஆர்., அரசு மகளிர் கலைக்கல்லுாரியில் முதலாம் ஆண்டு படித்து வருகின்றார். கடந்த 18ம் தேதி பஞ்சமாதேவியில் உள்ள அவரது தாத்தா வீட்டிலிருந்து வெளியில் சென்றவர் மீண்டும் திரும்பிவரவில்லை. பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.
வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
