/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கல்லுாரி மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் திண்டிவனம் அருகே பரபரப்பு
/
கல்லுாரி மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் திண்டிவனம் அருகே பரபரப்பு
கல்லுாரி மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் திண்டிவனம் அருகே பரபரப்பு
கல்லுாரி மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் திண்டிவனம் அருகே பரபரப்பு
ADDED : ஜூலை 05, 2025 04:42 AM

திண்டிவனம் : தேன் அடையை சாப்பிட்ட, கல்லுாரி மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டிவனம் அருகே கோனேரிக்குப்பத்தில் தனியார் கலைக்கல்லுாரி உள்ளது. இந்த கல்லுாரி வளாகத்தில் பெரிய அளவில் தேனீக்கள் கட்டிய கூடு இருந்தது. மாணவர்களுக்கு அச்சுறுத்தலாக இருந்ததால் நேற்று முன்தினம் காலையில் தேனீக்கள் கூட்டை தீயணைப்புத்துறையினர் மருந்து தெளித்து அழித்தனர்.
இந்நிலையில் அந்த கல்லுாரியில் தங்கி பயிலும் மாணவர்கள்,10க்கும் மேற்பட்டோர் அன்றையதினம்
மாலையில் கீழே கிடந்த தேன் அடையை எடுத்து சாப்பிட்டனர். இதை சாப்பிட்ட, 10க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியருக்கு நேற்று காலை வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. தொடர்ந்து திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டனர்.
சிகிச்சைக்கு பின்னர் அனைத்து மாணவர்களும் கல்லுாரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.