/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஸ்ரீரங்கபூபதி பொறியியல் கல்லூரியில் வகுப்புகள் துவக்க விழா
/
ஸ்ரீரங்கபூபதி பொறியியல் கல்லூரியில் வகுப்புகள் துவக்க விழா
ஸ்ரீரங்கபூபதி பொறியியல் கல்லூரியில் வகுப்புகள் துவக்க விழா
ஸ்ரீரங்கபூபதி பொறியியல் கல்லூரியில் வகுப்புகள் துவக்க விழா
ADDED : ஆக 21, 2025 09:16 PM

செஞ்சி; ஸ்ரீரங்கபூபதி பொறியியல் கல்லுாரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் துவக்க விழா நடந்தது.
செஞ்சி அடுத்த ஆலம்பூண்டி ஸ்ரீரங்கபூபதி பொறியியல் கல்லுாரியில், 17 வது ஆண்டாக, முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் துவக்க விழா நடந்தது.
கல்லுாரி சேர்மன் ரங்கபூபதி தலைமை தாங்கினார். செயலாளர் ஸ்ரீபதி முன்னிலை வகித்தார். இயக்குனர்கள் சாந்திபூபதி, சரண்யா ஸ்ரீபதி குத்து விளக்கேற்றினார்.
சி.இ.ஓ., மணிகண்டன் வரவேற்றார். பேராசிரியர், நடிகர் ஞானசம்மந்தம் சிறப்புரை நிகழ்த்தி, மாணவர்களுக்கு புத்தகங்களை வழங்கி வகுப்புகளை துவக்கி வைத்தார்.
கல்லூரி முதல்வர் பாவேந்தன், பேராசிரியர்கள் செல்வம், சத்தியமூர்த்தி, திருஞானசம்பந்தம், ஆசோக்குமார், விஜி, ஜெயசித்ரா மற்றும் பெற்றோர், மாணவர்கள் கலந்து கொண்டனர்.துணை முதல்வர் முருகதாஸ் நன்றி கூறினார்.