ADDED : ஜூன் 02, 2025 10:58 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டியில் பணி நிறைவு பெறும் சப் இன்ஸ்பெக்டருக்கு பாராட்டு விழா நடந்தது.
விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் பணிபுரிந்த சப் இன்ஸ்பெக்டர் ஞானகுமார் பணி நிறைவு பெறுவதையொட்டி நடந்த பாராட்டு விழாவிற்கு, டி.எஸ்.பி., சரவணன் தலைமை தாங்கினார்.
இன்ஸ்பெக்டர்கள் சத்தியசீலன், பாண்டியன் முன்னிலை வகித்தனர். விழாவில் சப் இன்ஸ்பெக்டர் ஞானகுமார் கவுரவிக்கப்பட்டார்.
சப் இன்ஸ்பெக்டர்கள் கந்தசாமி, விவேகானந்தன், செந்தில் முருகன், மணிகண்டன், சிவானந்தன், சுந்தர்ராஜன் மற்றும் ஞானகுமார் குடும்பத்தினர் பங்கேற்றனர்.