ADDED : ஏப் 07, 2025 06:39 AM

திண்டிவனம்; திண்டிவனம் பாங்கொளத்துாரில் சமூக நலத்துறை சார்பில், கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடந்தது.
பச்சைவாழியம்மன் கோவிலில் நடந்த விழாவிற்கு, ஒலக்கூர் ஒன்றிய சேர்மன் சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.
வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் செல்வி வரவேற்றார். 100 கர்ப்பணிகளுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் சீர் வரிசைகளை மஸ்தான எம்.எல்.ஏ., வழங்கினார்.
முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மாசிலாமணி, சேதுநாதன், மாநில தீர்மானக்குழு உறுப்பினர் சிவா, ஒலக்கூர் ஒன்றிய துணைச் சேர்மன் ராஜாராம், திண்டிவனம் நகர செயலாளர் கண்ணன், மாவட்ட பொருளாளர் ரமணன், வர்த்தகர் அணி துணை தலைவர் பிரகாஷ், மாவட்ட கவுன்சிலர் ஏழிலரசி உட்பட பலர் பங்கேற்றனர்.
விழுப்புரம்
கோலியனுாரில் விழாவிற்கு, லட்சுமணன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி 100 கர்ப்பிணிகளுக்கு அரசு சார்பில் சீர் வரிசை பொருட்கள், ஊட்டச் சத்து பெட்டகங்களை வழங்கி வாழ்த்தினார். குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் கவிதா வரவேற்றார். மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், ஒன்றிய சேர்மன் சச்சிதானந்தம், வட்டார மருத்துவ அலுவலர் பிரியாபத்மாசினி, தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் தெய்வசிகாமணி, மும்மூர்த்தி, முருகவேல், பேரூராட்சி செயலாளர் ஜீவா, மாவட்ட கவுன்சிலர்கள் தமிழ்ச்செல்வி கேசவன், வனிதா ஹரிராமன், துணை சேர்மன் உதயகுமார் முன்னிலை வகித்தனர்.
தி.மு.க., நிர்வாகிகள் கண்ணப்பன், சம்பத், கேசவன், செந்தில்குமார், முன்னாள் சேர்மன் குப்புசாமி, சவுந்தரராஜன், ஸ்ரீதர், ஜெயபால், பன்னீர்செல்வம், ஒன்றிய கவுன்சிலர் சந்திரசேகர், ஊராட்சி தலைவர்கள் இருசன், மணிவேல், கிருஷ்ணன், மணி உட்பட பலர் பங்கேற்றனர்.

