/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பெஞ்சல் புயல் பாதித்த வியாபாரிகளுக்கு ரூ.3.79 கோடி இழப்பீட்டு தொகை வழங்கல்
/
பெஞ்சல் புயல் பாதித்த வியாபாரிகளுக்கு ரூ.3.79 கோடி இழப்பீட்டு தொகை வழங்கல்
பெஞ்சல் புயல் பாதித்த வியாபாரிகளுக்கு ரூ.3.79 கோடி இழப்பீட்டு தொகை வழங்கல்
பெஞ்சல் புயல் பாதித்த வியாபாரிகளுக்கு ரூ.3.79 கோடி இழப்பீட்டு தொகை வழங்கல்
ADDED : மே 31, 2025 12:08 AM

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், பெஞ்சால் புயலில் பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு ரூ. 3.79 கோடி இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டது.
விக்கிரவாண்டி பஸ் நிலையத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கினார். ரவிக்குமார் எம்.பி., வேளாண்மை ஆணையர் ஆபிரஹாம் முன்னிலை வகித்தனர். வேளாண்மை இணை இயக்குனர் ஈஸ்வர் வரவேற்றார்.
வேளாண்மை துறை அமைச்சர் பன்னீர்செல்வம் பங்கேற்று, பெஞ்சல் புயலின்போது வேளாண் விற்பனை கூடத்தில் விளை பொருட்கள் வைத்திருந்த, 58 வியாபாரிகளுக்கு, ரூ. 3.79 கோடி இழப்பீட்டு தொகை வழங்கினார்.
நிகழ்ச்சியில், எம்.எல்.ஏ.க்கள் அமைச்சர் பொன்முடி, அன்னியூர் சிவா, மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், முன்னாள் எம்.பி., கவுதம சிகாமணி, இணை இயக்குனர் ஜெயக்குமார், உதவி இயக்குனர் கங்கா கவுரி, விற்பனை குழு செயலாளர் சந்துரு, மேற்பார்வையாளர் சவுமியா தீபக், செயல் அலுவலர் ஷேக் லத்திப், ஒன்றிய சேர்மன் சங்கீத அரசி ரவிதுரை, துணைச் சேர்மன் ஜீவிதா ரவி, பேரூராட்சி சேர்மன் அப்துல் சலாம் துணை சேர்மன் பாலாஜி, மாவட்ட கவுன்சிலர்கள் மீனா வெங்கடேசன், முருகன்,ஒன்றிய செயலாளர்கள் வேம்பி ரவி, ரவிதுரை ,ஜெயபால், கல்பட்டு ராஜா முருகன், மும்மூர்த்தி, நகர செயலாளர் நைனா முகமது, வியாபாரிகள், பொதுமக்கள் பலர் பங்கேற்றனர். துணை இயக்குனர் சுமதி நன்றி கூறினார்.