/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வானுார் அரசு கல்லுாரியில் போதை ஒழிப்பு குறித்த போட்டி
/
வானுார் அரசு கல்லுாரியில் போதை ஒழிப்பு குறித்த போட்டி
வானுார் அரசு கல்லுாரியில் போதை ஒழிப்பு குறித்த போட்டி
வானுார் அரசு கல்லுாரியில் போதை ஒழிப்பு குறித்த போட்டி
ADDED : டிச 08, 2025 06:39 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வானுார்: வானுார் அரசு கலைக்கல்லுாரியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு வாசகங்கள் எழுதும் போட்டி நடந்தது.
கல்லுாரி கல்வி இயக்கத்தின் வழிகாட்டுதல்படி, போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு என்ற தலைப்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு வாசகங்கள் எழுதும் போட்டி நடந்தது.
கல்லுாரி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாணவர்கள், போதை பொருளுக்கு எதிரான வாசகங்களை எழுதினர்.
போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களையும், பள்ளி முதல்வர் வில்லியம் பாராட்டினார். போட்டிக்கான ஏற்பாடுகளை போதை ஒழிப்பு ஒருங்கிணைப்பாளர் காந்திமதி செய்திருந்தார்.